திருச்சி பிஹெச்இஎல் டிஎஸ் முரளி அவர்களுக்கு பதவி உயர்வு:

0
Business trichy

 திருச்சி பிஹெச்இஎல் டிஎஸ் முரளி அவர்களுக்கு பதவி உயர்வு:

டிஎஸ் முரளி, அவர்கள், திருச்சி உள்ள உயர் அழுத்த கொதிகலன் ஆலை மற்றும் இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை மற்றும் பஞ்சாபின் கோயிண்ட்வாலில் உள்ள பிஹெச்இஎல் தொழிலக வால்வுகள் ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளி வளாகத்தின் பொதுமேலாளர் மற்றும் தலைவராக, செயலாண்மை இயக்குநருக்கான முழு அதிகாரங்களுடன் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஆகஸ்டில், பிஹெச்இஎல் திருச்சி  பொது மேலாளர், செயல்பாடுகள் ஆக நியமிக்கப்பட்ட திரு டி எஸ் முரளி, உயர் அழுத்த கொதிகலன் ஆலை, வெளித் தயாரிப்புகள், கச்சாப் பொருட்கள் மேலாண்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.பின்னர் புதிய வளர்ச்சி பகுதிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளுக்கான பொறுப்பும் அவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது.

loan point

பிஹெச்இஎல்லின் பல்வேறுதிட்டத் தளங்கள், உற்பத்திப் பிரிவுகள் மற்றும் புது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றில் 33 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணீயாற்றிய அனுபவமுள்ள தொழில்நுட்ப வல்லுநர், மூலோபாய சிந்தனையாளர் மற்றும் நிர்வாகியான  டிஎஸ் முரளி, ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பட்டம் பெற்று 1986-ஆம் ஆண்டு பிஹெச்இஎல்லின் மின்னாற்றல் துறையில் ஒரு பயிற்சி பொறியாளராக சேர்ந்தார்.

nammalvar

அடுத்த 15 ஆண்டுகளில், சென்னையில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்திடமிருந்து புள்ளிவிவர தரக் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சியில் முதுகலைத் தகுதியைப் பெற்றதுடன், பல்வேறு திட்டத் தளங்களில் கொதிகலன் நிறுவுதல் உள்ளிட்ட மின்னாலைக் கட்டுமானம், களத் தர உறுதி மற்றும் நீராவி விசையாழிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்றார்.

web designer

2001-ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள பிஹெச்இஎல்லின் கனரக உபகரண ஆலையில் செயலாண்மை இயக்குநரின் சிறப்பு உதவியாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார், மேலும், ஒரு பெரிய பிஹெச்இஎல்உற்பத்தி பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் அனுபவத்தைப் பெற்ற பின்னர், 2004-ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள பிஹெச்இஎல்லின் தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட அவர் குழும திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் குழுவில் இணைந்தார்.

டிஎஸ் முரளி,2008-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத கனரக வட்டுகள் மற்றும் கலன்கள் ஆலை பிஹெச்இஎல்லினால் கையகப்படுத்தப்பட்ட பின்னர்ஆலையின்செயல்பாடுகள்துறைபொதுமேலாளர்ஆக நியமிக்கப்பட்டார், அங்கு நவீன செயல்பாட்டு மேலாண்மை, மூலதன முதலீடு, பராமரிப்பு மற்றும் புதுப்பிக்க திட்டமிடும் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

2013-ஆம் ஆண்டில், அவர் மீண்டும் பிஹெச்இஎல்லின் தலைமை அலுவலகத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் செயலகத்தில் திட்டமிடல் துறை பொதுமேலாளராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் அவர், பிஹெச்இஎல்லின் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமையக மூலோபாய மேலாண்மை செயல்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டார்.

2018-ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள பிஹெச்இஎல்லின் கனரக உபகரண பழுதுபார்க்கும் ஆலையின் தலைவராக அவருக்கு சுயாதீன பொறுப்பு வழங்கப்பட்டது.

டி எஸ் முரளி நாட்டின்பலபகுதிகளுக்குப் பயணம் செய்தவர். மேலும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் உரையாட அறிந்தவர். 2018-ஆம் ஆண்டு முதல் வாரணாசியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (முன்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகதொழில்நுட்பக்கழகம்) ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றிய இவர், இந்திய பற்றிணைப்புக் கழக உறுப்பினராகவும் உள்ளார்.

புது தில்லியில் உள்ளபிஹெச்இஎல்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் செயலாண்மை இயக்குனர் திரு ஆர் பத்மநாபன் அவர்களைத் தொடர்ந்து திரு டிஎஸ் முரளி பிஹெச்இஎல்லின் திருச்சி வளாகத்துக்கு பொறுப்பேற்கிறார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.