திருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

0
Business trichy

திருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப,அவர்கள் வெளியிடுள்ள செய்திக்குறிப்பு: 

web designer

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த வட்டாரங்களில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் வருகின்ற 27.11.2020 அன்று நடைபெறவுள்ளது.

loan point

நவம்பர் 2020 மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.11.2020 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள்,  வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள்,  விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

nammalvar

மேலும் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயப் பெருங்குடி மக்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.