ஆறாவது உலகளாவிய வேதியியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு கருத்தரங்கு (ICCER-2020)

ஆறாவது உலகளாவிய வேதியியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு கருத்தரங்கு (ICCER-2020)
ஜமால் முகமது கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியல் துறையில் இணைய வழி ஆறாவது உலகளாவிய மற்றும் சுற்றுசூழல் ஆய்வு கருத்தரங்கு 12 நவம்பர் 2020 நடத்தப்பட்டது .
இதில் மால்வி ,UAE மற்றும் USA போன்ற உலகநாடுகளிலிருந்தும் இந்தியாவில் கேரளா ,கர்நாடக, ஆந்திரா,மத்தியபிரதேசம்,உத்திரபிரதேசம், ஒரிசா,புதுச்சேரி மற்றும் காஷ்மீர் மாநிலங்களிலிருந்தும் 400க்கும் அதிகமான நபர்கள் பங்குபெற்றனர் 130 ஆய்வு கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை முனைவர் M .A .குரைஷி பேராசிரியர், அரசர் பஹது பல்கலைக்கழகம், சவுதிஅரேபியா அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வுகளுக்கு காப்புரிமை பெறுவதும் அதின் சிறப்பு அம்சங் களையும் கூறி ஆய்வுகளை ஊக்குவித்து மேலும் பசுமை வேதியல் பயன்களை வேதி அரிமான கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலில் விளக்கி பேசினார்.


முன்னதாக துறையின் தலைவர் மற்றும் கூடுதல் துணை முதல்வர் முனைவர் M .முகமது சிகாபுதின் வரவேற்று பேசினர், முதல்வர் முனைவர் S .இஸ்மாயில் முகைதின் தலைமை தாங்கினர், கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் முனைவர் A.K. காஜா நசிமுதீன் ,பொருளர் ஹாஜி M .J .ஜமால் முகமது மற்றும் துணை செயலர் முனைவர் K .அப்துல் சமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முனைவர் M .புருஷோத்தமன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருத்தரங்கின் நோக்கத்தினை எடுத்துரைத்தார் . இதில் முனைவர் V .திருசெல்வம்,டெக்சாஸ் பல்கலைக்கழகம் ,USA ,முனைவர் சீனிவாசன் ஆனந்தன் ,விஞ்ஞானி -E ,ARCI ,ஹைதிராபாத் மற்றும் முனைவர் பத்தே வீர் சிங்க் , பேராசிரியர் VIT பல்கலைக்கழகம் ,சென்னை ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இறுதியாக முனைவர் R .ராமரத்தினம் ,தலைவர் பாசில் எனர்ஜடிக்ஸ் Pvt .Ltd . சென்னை பசுமை ஆற்றலில் வேதியலின் பங்கு என்ற தலைப்பில் முடிவுரை ஆற்றினார் . விழாவின் அறிக்கையை முனைவர் எ.முசிரா பானு மற்றும் நன்றிவுரையை முனைவர் S.முகமது ரபீக் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முறையே வழங்கினர்கள்.
இந்நிகழ்வில் முனைவர் K .N .அப்துல் காதர் நிகால் உறுப்பினர் மற்றும் கவுரவ இயக்குனர்,கல்லூரி விடுதி நிர்வாக இயக்குனர் முனைவர் K .N .முகமது பாசில் மற்றும் மகளிர் விடுதி இயக்குனர் செல்வி. M .ஹாஜிரா பாத்திமா ஆகியோர் பங்குபெற்று விழாவினை சிறப்பித்தனர் . நாட்டுபண் உடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது
