திருச்சியில் 108 அவசர ஊர்தி சேவை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

0
Business trichy

திருச்சியில் 108 அவசர ஊர்தி சேவை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், சுகாதாரத் துறையின் மூலம்  ஐந்து, 108 அவசர ஊர்தி சேவை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டிலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் ரூபாய் 46.11 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 64வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 15 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றதை பாராட்டி ரூபாய் 22.50 இலட்சம்  ஊக்கத் தொகை காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவா்  திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சா்  திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளா்மதி ஆகியோர் இன்று (23.11.2020) வழங்கினார்கள்.

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் 108 அவசர
ஊர்தி சேவையை தொடங்கி வைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை காசோலை வழங்கி தெரிவித்ததாவது:

loan point

nammalvar

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு
தேவையான நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். ஏழை எளிய
மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நமது மாவட்டத்தில் பிரசவம், நெஞ்சுவலி, மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தேவைகள், எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்து, உள்ளிட்ட அவசர காலத்தில் அரசு மருத்துவமனை செல்ல 34 இடங்களில் 108 அவசர ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் வெண்டிலேட்டர், மானிட்டர், டீ.பி புல்லேட்ர் போன்ற உயிர் காக்கும்  கருவிகள் உள்ளன. நமது மாவட்டத்தில் அதிகமான அவசர அழைப்பு 108 ஊர்தி சேவைக்கு வருவதால் கூடுதலாக மேலும்; ஐந்து 108 ஊர்தி சேவை வையம்பட்டி, வளநாடு, ஜம்புநாதபுரம் குழுமணி, இ.பி.ரோடு ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு சேவை புரிய உள்ளது. இந்த ஐந்து வாகனத்தின் மதிப்பு ரூபாய் 1 கோடியே 15 இலட்சம் ஆகும்.

web designer

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம்வழங்கும் திட்டத்தின் கீழ் 17மாற்றுத்திறனாளிகளுக்கு
4,11,666 ரூபாய் மதிப்பிலான காசோலையும் தசை சிதைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும சிறப்பு சக்கர நாற்காலி ரூபாய் 41,99,958
மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 46,11,624 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2018-19ஆம் ஆண்டிற்கான 64வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய பல்வேறு விளையாட்டு போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் முதலிடம்பெற்ற 5 நபர்களுக்கு தலா ரூபாய் 2 இலட்சமும், இரண்டாம் இடம் பெற்ற 3 நபர்களுக்கு தலா ரூபாய் 1.50 இலட்சமும், மூன்றாம் இடம் பெற்ற 8 நபர்களுக்கு தலா ரூபாய் 1.00 இலட்சம் ஆக மொத்தம்; 15 நபர்களுக்கு ரூபாய் 22.50 இலட்சம் ஊக்கத்தொகை காசோலையாக வழங்கப்படுகிறது. விளையாட்டில் மாணவ, மாணவியர்கள் பன்னாட்டு அளவில் சாதனை புரிவதற்கு ஏழைஎளிய மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் அரசுக்கு தொடர்ந்து பொதுமக்களாகிய நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் 108 அவசர ஊர்தி சேவையை தொடங்கி வைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை காசோலை வழங்கி தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவா்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை
தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற
நோக்கத்தில் நமது மாவட்டத்தில் பிரசவம், நெஞ்சுவலி, மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான
தேவைகள், எதிர்பாராத வகையில் ஏற்படும்  விபத்து, உள்ளிட்ட அவசர காலத்தில் அரசு
மருத்துவமனை செல்ல 34 இடங்களில் 108 அவசர ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது. நமது
மாவட்டத்தில்அதிகமான அவசர அழைப்பு 108 ஊர்தி சேவைக்கு வருவதால் கூடுதலாக மேலும்
ஐந்து 108 ஊர்தி சேவை வையம்பட்டி, வளநாடு, ஜம்புநாதபுரம், குழுமணி, இ.பி.ரோடு ஆகிய
இடங்களில் பொதுமக்களுக்கு சேவை புரிய உள்ளது. இந்த ஐந்து வாகனத்தின் மதிப்பு ரூபாய் 1
கோடியே 15 இலட்சம் ஆகும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் மானியமாக 17 நபர்களுக்கும் தசை சிதைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி என ஆக மொத்தம் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 46.11 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும்
மாவட்ட விளையாட்டு துறையின் மூலம் 2018-19ம் ஆண்டிற்கான 64வது தேசிய பள்ளிகள்
விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் சார்பாக 400மீ ஓட்டப்பந்தயத்தில் டி.கெசிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 2 இலட்சம்
ஊக்கத்தொகை காசோலையாகவும் கடற்கரை கையுந்துபந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆன்டனி ஜெபாஸ்டீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 2 இலட்சம் ஊக்கத்தொகையும், 19 வயதிற்குள்ளவர்களின் கேரம் போட்டியில் எஸ்.ஜோன் ஸ்கிரிஷ்பர்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய்2 இலட்சம்; ஊக்கத்தொகையும், 17 வயதிற்குள்ளவர்களின் கேரம் போட்டியில் எம்.கிஷோர்; தங்கப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 2 இலட்சம் ஊக்கத்தொகையும் வாலிபால் போட்டியில் ஜெ.கோகுல் தங்கப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 2 இலட்சம் ஊக்கத்தொகையும், இறகுப்பந்து போட்டியில் எஸ்.கோகுல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.50 இலட்சம் ஊக்கத்தொகையும் பூப்பந்து போட்டியில் திரு.எஸ்.ஜதிந்திரநாத் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.50 இலட்சம்  ஊக்கத்தொகையும்; பூப்பந்து
போட்டியில் என்.அப்துல் ரஹீம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.50 இலட்சம்
ஊக்கத்தொகையும், தடகளம் 400மீ  தடை தாண்டுதல் 4x 400மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டியில்
ஆர்.சுதேஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 2.00 இலட்சம் ஊக்கத்தொகையும் தடகளம்-கோலூன்றி தாண்டுதல் போட்டியில் டி.யுவன் பிரசாந்த் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.00 இலட்சம் ஊக்கத்தொகையும், கராத்தே போட்டியில் ஏ.பிரவீன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய்1.00 இலட்சம் ஊக்கத்தொகையும் டென்னிஸ் போட்டியில் ஆர்.எஸ்.ராஜேஸ் கண்ணன் மற்றும் பி.ஓவியா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி தலா ரூபாய் 1.00 இலட்சம் ஊக்கத்தொகையும், சதுரங்கம் போட்டியில் பி.விஜய சுபஸ்ரீ வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.00 இலட்சம் ஊக்கத்தொகையும், தடகளம் போட்டியில் எ.கெவினா அஸ்வினி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி ரூபாய் 1.00 இலட்சம் ஊக்கத்தொகை என மொத்தம் 15 வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 22.50 இலட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுகிறது. அம்மா அவா்களின் அரசு தான் ஏழை எளிய மக்களை பாதுகாக்கும்அரசாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர்.வனிதா, இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் டாக்டர்.லெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.இராமகிருட்டினன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பிரபு, 108 அரவச ஊர்தி சேவை மண்டல மேலாளா் த.அறிவுக்கரசு, மாவட்ட செயல் அலுவலர்கள் திரு.டி.கார்த்தி, எஸ்.அருள்குமார் மற்றும்; பலர் கலந்து
கொண்டனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.