2020-21ம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கரவாகனம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்:

1
Business trichy

 

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ,ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழைக்கும் மகளிரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக,  50%  மானிய விலையில் அம்மா இரு சக்கரவாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பாண்டிற்கு (2020-21) தகுதியான பணிக்கு செல்லும் பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சார்ந்த பணிபுரியும்; மகளிருக்கு இரு சக்கரவாகனம் வாங்க (auto gear/gearless 125cக்கு மிகாமல்)  மானியத் தொகையாக ரூபாய் 25000- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

loan point
web designer

இத்திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்காணும் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

nammalvar

1. வயது 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.
2. விண்ணப்பிக்கும் நாளில் தகுதியான பழகுநர் உரிமம் இருந்தால் போதும். மானியம் பெறுவதற்குள் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
3. விண்ணப்பிக்கும் நபரின் ஆண்டு வருமானம் ரூ.25,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. பயனாளி, அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிபவராக/
சிறுதொழில்/ சுயதொழில் செய்பவராக இருத்தல் வேண்டும்.
5. தொலைதூரம் / மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள், பெண்களைக் குடும்பத்தலைவராகக் கொண்ட குடும்பங்கள்,
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள்,  மாற்றுத்திறனாளிகள்,  35 வயதைக் கடந்த
திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள், ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
6. மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் (Retro fitting Vehicle) வாங்கும் மாற்றுத் திறனாளி பெண் பயனாளிகளுக்கு மானியம் ரூ.31250/- வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம், பூர்த்திசெய்துவிண்ணப்பங்கள் கொடுக்கப்பட வேண்டிய இடம்::
1. அனைத்து ஊராட்சிஒன்றியஅலுவலகங்கள் (ஊரக பகுதிகளுக்கு)
2. அனைத்து பேரூராட்சிஅலுவலகங்கள் (பேரூராட்சி பகுதிகளுக்கு)
3. அனைத்து நகராட்சிஅலுவலகங்கள் (நகராட்சி பகுதிகளுக்கு)
4. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ( மாநகராட்சி பகுதிகளுக்கு)
விண்ணப்பங்கள் மேற்கண்டுள்ள அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

தகுதியான பணிக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

IAS academy
1 Comment
  1. Vijayalakshmi P says

    Sir & Madam Please Required Sir,

Leave A Reply

Your email address will not be published.