நவம்பர் 22  ஜான் எஃப். கென்னடி நினைவு தினம்:

0
1

நவம்பர் 22  ஜான் எஃப். கென்னடி நினைவு தினம்:

நவம்பர் 22  ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி நினைவுதினம்:

2

ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 – நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை இருந்தவர்.

இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வானார்.

மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவரானார். இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

4

நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது.

ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது.

அமெரிக்க அதிபராக 1961-ஆம் ஆண்டு தனது 43-வது வயதில் பதவியேற்ற ஜான் கென்னடி , 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று சுட்டு கொல்லப்பட்டார்… அமெரிக்காவின் 35-வது அதிபரான ஜான் F கென்னடி கெளரவபடுத்த அமெரிக்க அஞ்சல்துறை 1964-ஆம் ஆண்டு 5-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.

வரலாற்றில் நவம்பர் 22 ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர்

ஜான் எஃப். கென்னடி

நினைவுதினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.