வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்:

0
Full Page

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்:

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (20.11.2020) நடைபெற்றது

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டு, 16.11.2020 முதல் 15.12.2020 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி அலுவலர்களைக் கொண்டு படிவம் 6, 7, 8 மற்றும் 8A பெறப்படும், அதன் ஒரு பகுதியாக 21.11.2020 -சனிக்கிழமை, 22.11.2020-ஞாயிற்றுக்கிழமை மற்றும் 12.12.2020-சனிக்கிழமை,13.12.2020- ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் பணிகள் நடைபெறும்.

Half page

இப்பணிகள் செவ்வனே நடைபெற அனைத்து தலைமை அலுவலர்களும் தங்களது
ஆளுகைக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை காலை 10.00 மணி முதல் மாலை 05.00மணி வரை வாக்குச்சாவடி மைய அலுவலர் தலைமையில் திறந்து வைக்கவும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதிய எண்ணிக்கையில் படிவம் 6, 7,  8 மற்றும் 8A உள்ளதை உறுதி செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவரை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் மொத்தமாக எக்காரணம் கொண்டும் படிவம் 6, 7,  8 மற்றும் 8A பெறக்கூடாது. சுருக்கு முறை திருத்தம் 2021 முழுமைக்கும் சேர்த்து ஒரு வாக்குச்சாவடி முகவர் அதிகபட்சமாக முப்பது மனுக்கள் வரை சமர்ப்பிக்கலாம். ஒரே நேரத்தில் ஐந்து மனுக்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற விபரத்தினை வாக்குச் சாவடி முகவர்களுக்கு தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் ஏதேனும் சந்தேகம் எழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து தலைமை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.