மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை : திருச்சி கலெக்டர் அறிவிப்பு:

0
Full Page

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை : திருச்சி கலெக்டர் அறிவிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும்
குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

Half page

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.1000/-ம்,  6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000/-ம், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.4000/-ம், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6000/-ம், முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.7000/-ம் என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளர் உதவித்தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3000/-ம், இளங்கலை பட்டம் ரூ.5000/-ம் மற்றும முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.6000/-ம் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பத்துடன் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன்  விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590-ல் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.