கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:

0

கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:

திருச்சி கலெக்டர் க. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

food

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும், ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கு கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்ப படிவம் www.awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து தெடர்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் 25.11.2020 அன்று மாலை 5.00 மணிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரையுடன் 27.11.2020-ஆம் தேதிக்குள் தலைமையலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.