ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொலை நோக்கு பார்வை தேவை – மக்கள் நீதி மைய வழக்கறிஞர் கோரிக்கை

0
Full Page

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொலை நோக்கு பார்வை தேவை – மக்கள் நீதி மைய வழக்கறிஞர் கோரிக்கை

பல நூறு கோடி செலவில் திருச்சி மாநகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “ஸ்மார்ட்டாக்கி” வருகிறது திருச்சி மாநகராட்சி நிர்வாகம். ஆனால் இந்த திட்ட பணிகளில் எதிலியுமே தொலை நோக்கு பார்வை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது…? இன்று குற்றம் சாட்டுகிறார் மக்கள் நீதி மைய வழக்கறிஞர்.

இதுகுறித்து அவர் பதிவு : உதாரணமாக சமிப நாட்களில் திருச்சியில் அரை மணி நேர மழைக்கே மாநகர் தத்தளிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.

மேலும் திருச்சி மாநகரில் பிரதான சாலைகளில் உள்ள சாக்கடைகளை அகலபடுத்தி, ஆழப்படுத்தியும், உயரபடுத்தியும் சாக்கடை அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் வீட்டின் உயரத்திற்கு சாக்கடையும் உயர்ந்துள்ளது. ஆனால் மழை காலங்களில் சாக்கடை வழியாக ஓட வேண்டிய கழிவு நீர் வீட்டிற்குள் ஓடுகிறது என்ற குற்றசாட்டு பிரதானமாக எழுகிறது.

மேலும் இன்னும் பணியே ழுமையாக முடியாத பொழுது எப்படி குற்றசாட்டலாம் என கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனென்றால் உறையூர் சாலை ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் பணிகள் முடிந்துள்ளது. ஆனால் அங்கேயும் இதே நிலை தான். மேலும் மழை நீர் சேகரிப்பை முன்னெடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் “மழைநீர் சேகரிப்பு” விஷயத்திலும் அசட்டையாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Half page

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக செயல்படுத்தினால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா என்றால்…? இல்லையென்று தெரிவிக்கிறார்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் ஏற்புடையதாக உள்ளது.

என்னவென்றால் திருச்சி மத்திய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்த குறுக்கே கட்டைகளை அமைத்து பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்றொரு அமைப்பு தான் சத்திர பேருந்து நிலையத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை ரிவர்ஸ் எடுத்து திருப்ப போதுமான இடவசதி உள்ளது. ஆனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இடம் வசதி மிக குறைவு என்பதை போக்குவரத்து காவல் அதிகாரிகள் சுட்டிகாட்டுகிறார்கள்.

இதனால் சத்திரம் பேருந்து நிலையம் எதிர்காலத்தில் குறிப்பிட்ட தடுப்பு கட்டைகளில் நிறுத்தப்படும் பேருந்து ரிவர்ஸ் எடுத்து திருப்புவதற்கு காலதாமதம் ஏற்படும் என்றும். இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் காவல் அதிகாரிகள்.

மேலும் மாநகர் பிரதான சாலைகளில் நடை பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாமல் தான் கட்டிடங்கள் உள்ளன. அப்படியே பார்கிங் வசதி இருந்தாலும். தற்பொழுது பார்கிங் எல்லாம் கடைகளாக மாறியுள்ளனர். இதனையெல்லாம் சரிசெய்யவில்லை என்றால், பொதுமக்கள் தங்களது வாகனத்தை நடைபாதையை அடுத்து நிறுத்தினால் சாலை குறுகி, மாநகரில் உள்ள ஒவ்வொரு சாலையும் “பெரிய கடை வீதி, N.S.Bசாலையை போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சிந்தித்து செயலாற்றினால் மாநகர் மக்களுக்கு மழை காலம், வெயில் காலம் என எக்காலத்திலும் இடையூறு ஏற்படாது. எனவே உடனடியாக கள ஆய்வு செய்து இதனை சரிசெய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.