குமாரவயலூர் செல்வோமா? கந்தர் ஷஷ்டி(20.11.2020)

0
Business trichy

நாளை கந்தர் ஷஷ்டி விழா….(20.11.2020)

உலகமே கொரோனா என்ற வைரஸ் தொற்றால் பயந்து போய் வாழ்ந்து வரும் இந்த சூழலில் முருகப்பெருமான் எப்படி அசுரர்களை வதைத்து தேவர்களை காத்தருளினானோ அதேபோல் நம்மையும் காப்பான் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் நம் வீட்டிலேயே முருகப்பெருமானை வணங்கி வெற்றியையும், வாழ்வில் சுபிட்சமும் அடைவோமாக.

நாம் அனைவரும் மனதால் வயலூருக்கு செல்வோமா?

Half page

முருகபக்தரான கிருபானந்த வாரியார்:

1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு கிருபானந்த வாரியார் வந்திருந்தபோது ,ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். மகிழ்ச்சியுடன் ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கையாக வாரியார் கொடுத்தார். அன்றிரவு கோயில் நிர்வாகி கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா? என்று கேட்க, வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்து விசாரித்தார். அப்போது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அர்ச்சகர் தெரிவிக்க,  வாரியாரிடமே அந்த காசை அனுப்பி விட்டார். கனவில் நடந்ததை அறிந்த வாரியார், கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

சதுர தாண்டவ நடராஜர்

வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம்.

விசேஷ விநாயகர்

அருணகிரிநாதருக்கு காட்சி தந்த பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார்.

முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

ஆதிநாதர், ஆதிநாயகி உறையும் சிவஸ்தலம் என்றாலும் முருகனுக்கு இங்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இக்கோயில் பற்றி …

Full Page

Leave A Reply

Your email address will not be published.