நவம்பர்19 உலக ஆண்கள் தினம்:

0
Full Page

நவம்பர்19 உலக ஆண்கள் தினம்:

உலகில் உள்ள ஆண்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.இச்சமூகத்தில் ஆண்களின் பங்கு என்பது முக்கியம். மகத்தான பல தியாகங்களை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் செய்து வரும் ஆண்களின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந் நாளை நினைவுபடுத்துகிறது.

Half page

 

சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இந்த தினம் விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கான பிரச்சினைகளை களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தங்களுக்காகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைத்து கவலைகளும் மறந்து கொண்டாட ஏற்படுத்தப்பட்டது . வரலாற்றில் நவம்பர் 19 ஆண்கள் தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.