அரசு பள்ளியிலிருந்து எம்.பி.பி.எஸ்க்கு தேர்வான திருச்சி மாணவ,மாணவியர்கள் பட்டியல்:

0
Full Page

அரசு பள்ளியிலிருந்து எம்.பி.பி.எஸ்க்கு தேர்வான திருச்சி மாணவ,மாணவியர்கள் பட்டியல்:

அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். (MBBS) பயில்வதற்கு இன்று நடைபெற்ற கலந்தாய்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 11 மாணவ, மாணவியர்களுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது.

Half page

இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் எஸ்.ஹரிகிருஷ்ணா சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும், காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எஸ்.சரோஜினி மதுரை மருத்துவக் கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி பி.சத்யா தஞ்சாவூர்
மருத்துவக் கல்லூரியிலும், சேவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் பி.வெள்ளைச்சாமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும், திருவெள்ளரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஜி.கலையரசி மதுரை மருத்துவக்
கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியல் படித்த மாணவி வி.சுகந்தினிமா கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியிலும், மாணவி எஸ்.அபிநயா புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியிலும், திருப்பைஞ்ஜுலி அரசு
மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் டி.கிருஷ்ணகுமார் கரூர் மருத்துவக் கல்லூரியிலும்,  பச்சைபெருமாள்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி கே.ஆர்த்தி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் என மொத்தம் 9
மாணவ,  மாணவியர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. மேலும் தண்டலைபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி என்.பாரதி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன்
கிஷோர்குமார் ஆகிய 2 நபர்கள் மருத்துவம் படிப்பதற்கான காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் ஆக மொத்தம் 11 மாணவ, மாணவியர்கள் நேற்று (18.11.2020) நடைபெற்ற கலந்தாய்வில் பங்குபெற்று மருத்துவ படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு தேர்வான மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.