திருச்சி மதுரம் மருத்துவமனை மாவட்ட ஆட்சியரிடம் நிதியுதவி:

0
Full Page

திருச்சி மதுரம் மருத்துவமனை மாவட்ட ஆட்சியரிடம் நிதியுதவி:

திருச்சி மதுரம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஐவன் மதுரம் அவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் மதுரம் சுகாதாரம், கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை கடந்த 2018ஆம் ஆண்டு  முதல் ஜீவாதாரம் காக்கும் பணியை மக்கள் மத்தியில் செய்து வருகிறது. மேற்படி பணியில் டாக்டர். சாமுவேல் A. மதுரம் மற்றும் டாக்டர். சர்மிளி பிரிசில்லா மதுரம் அவர்களின் அயராத பங்களிப்புடன் திருச்சி, புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வந்த அனைத்து சமுதாய மக்களையும் அந்தந்த பகுதியில் சேவையாற்றி வரும் நண்பர்களைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக உதவியளிக்கப்பட்டுள்ளது.

Half page

கோவிட் 19 தொற்று நோய் ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு கடந்த மார்ச் 2020  முதல் ரூ.1000 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உயர்தரத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் 30 கிராமங்களைச் சந்தித்து ரூ.30,00,000 (முப்பது இலட்சம்) செலவில் மளிகைச் சாமான்கள் வழங்கப்பட்டதுடன் தனித்தனியாக முகக்கவசம் சானிட்டைசர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட் 19 தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்துவரும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்பு ஆனந்த பாக்கியம் என்ற திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் ஒளி பெறும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள் பெட்டிக் கடைகளுக்கு தேவையான அனைத்து விற்பனைப் பொருட்களும் இலவசமாக பயனாளிகளின் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை சுமார் 50 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 (ஐந்து இலட்சம்)  லட்சத்திற்கும் மேலான தொகை செலவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் கல்லூரிக் கட்டணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் சிறு வியாபாரிகளுக்கு புதிய தள்ளுவண்டிகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.

நேற்று 18.11.2020 உயர்திரு. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க வளர்ச்சிக்காக ரூ.1 இலட்சம் காசோலையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.