திருச்சி அருகே பூனாம்பாளையத்தில் மியாவாகி காடு திட்டம்:

0
full

திருச்சி அருகே பூனாம்பாளையத்தில் மியாவாகி காடு திட்டம்:

திருச்சிஅருகே பூனாம்பாளையம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் (அடர்வன குறுங்காடு) 50000 மரக்கன்றுகள் நடும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் (17.11.2020) நேற்று நடைபெற்றது.  இடைவெளி இல்லா அடர்காடு என்ற அடிப்படையில் குறைந்த இடத்தில் அதிகமான மரக்கன்றுகளை நடும் முறையே ”மியாவாகி காடு திட்டம்”.

ukr

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, இரயில்வே துறை, பேரூராட்சி ஆகிய துறைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைத்து மியாவாக்கி முறையில் (அடர்வன குறுங்காடு) சிறப்பாக நடப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள், ஸ்ரீரங்கம் தெற்குதேவி தெரு பெருமாள்புரம், சஞ்ஜீவ் நகர், பாலாஜி நகர், திருவானைக்கோவில் வடக்கு ஸ்ரீனிவாசநகர் ஆகிய இடங்களில் 35000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது 15 அடிக்கு மேல் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

poster

இலால்குடி இரயில்வே ஜங்சன் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் 15000 மரக்கன்றுகளும், கல்லக்குடி பேரூராட்சியில் 1.30 ஏக்கர் பரப்பளவில் 20000 மரக்கன்றுகளும், சமயபுரம், மாகாளிக்குடி கிராமத்தில் அருள்மிகு உஜ்ஜையினி ஓம்காளியம்மன் திருக்கோயில் பின்புறம் 0.85 ஏக்கர் பரப்பளவில் 10000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே, பூனாம்பாளையம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் (அடர்வன குறுங்காடு) மா, கொய்யா, புளி, வேம்பு, சப்போட்டா, எலும்பிச்சை, வாகை, பூவரசம் போன்ற பல்வேறு வகையான 50,000 மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பழனிகுமார், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் திருமதி.த.மலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.ராஜேந்திரன், திரு.எம்.மாதவன், பூனாம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் திருஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.