திருச்சி அருகே ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

0
Full Page

திருச்சி அருகே ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே  நடைபெற்று வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் (18.11.2020) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி, அரங்கூர்,  சீனிவாசநல்லூர், எம்.புதூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, உன்னியூர், சீலைபிள்ளையார்புதூர் ஆகிய 9 ஊராட்சிகளில் ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Half page

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சி, திருமலையூர் கிராமத்தில் ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.82 இலட்சம் மதிப்பீட்டிலும் அரங்கூர் ஊராட்சி, அனியாப்பட்டி கிராமத்தில் ரூபாய் 9.33 இலட்சம்  மதிப்பீட்டிலும்  சீனிவாசநல்லூர் ஊராட்சி,  சீனிவாசநல்லூர் கிராமத்தில் ரூபாய் 10.60 இலட்சம் மதிப்பீட்டிலும் எம்.புதூர் ஊராட்சி, தொட்டியப்பட்டி கிராமத்தில் ரூபாய் 15.42 இலட்சம் மதிப்பீட்டிலும் நத்தம் ஊராட்சி, மூங்கில்துறை கிராமத்தில் ரூபாய் 4.38 இலட்சம் மதிப்பீட்டிலும் , காடுவெட்டி ஊராட்சி, காடுவெட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும், முருங்கை ஊராட்சி, மருதம்பட்டி கிராமத்தில் ரூபாய் 2.42 இலட்சம் மதிப்பீட்டிலும் உன்னியூர் ஊராட்சி உன்னியூர் கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும் சீலைபிள்ளையார்புதூர் ஊராட்சி, சீலைபிள்ளையார்புதூர் கிராமத்தில் ரூபாய்  19.44 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 69.41 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும், விரைந்து முடித்து விரைவில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். 

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ச.பா.பாபு அண்ணாதுரை, திரு.வெ.ஸ்ரீதர் உதவி செயற்பொறியாளர் திரு.சுப்ரமணி, பொறியாளர்கள் திரு.மாதவன், திருமதி.கலாவதி, மற்றும் பலர் உடனிருந்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.