நவம்பர் 17 உலக குறைப்பிரசவ தினம்

0
Business trichy

நவம்பர் 17 உலக குறைப்பிரசவ தினம் 

உலக குறைப்பிரசவ தினம் (World Prematurity Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. இது உலகளவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளில் 10 பேரில் ஒரு குழந்தைக்குச் சமமாகும்.

web designer

உலகளாவிய ரீதியில் 15 மில்லியன் குழந்தைகள் மிக விரைவில் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன என்பதையும், நம்பகமான நேர போக்கு தரவுகளைக் கொண்ட பெரும்பாலான நாடுகளின் குறைப்பிரசவ விகிதங்கள் அதிகரித்து வருவதையும் நாடு அளவிலான மதிப்பீடுகள் காட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கு 4 இன் படி முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வது மிகவும் சிக்கலான ஒன்றாகக் கருதப்பட்டது. புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கு 5 தாய்வழி ஆரோக்கியம் மற்றும் தொற்று நோயற்ற நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் கூடுதல் குறைபாடுகளுடன் உள்ளதால் குடும்பங்களையும் மற்றும் நாட்டின் சுகாதார அமைப்பையும் பாதிக்கிறது.

loan point

2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பெற்றோர் அமைப்புகள் நவம்பர் 17 அன்று குறைப்பிரசவம் தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளாக உருவாக்கப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.தற்போது உலகளாவிய வருடாந்திர தினமாகவும் அனுசரிப்பட்டு வருகிறது

nammalvar

குறைப்பிரசவ தினம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பங்குதார அமைப்புகள் போன்றவை செயல்படுகின்றன. ஊடக பிரச்சாரங்கள், உள்ளூர் நிகழ்வுகள், பிராந்திய, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட பிற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை உண்டாக்கியது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ தினம் கொண்டாடப்பட்டது என்பதை வரலாற்றின் நவம்பர் 17 உலக குறை பிரசவ தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.