திருச்சியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்ட சமூக ஆர்வலர்கள்:

0
1

திருச்சியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்ட சமூக ஆர்வலர்கள்:

திருச்சி மாவட்டம், லால்குடி நன்னிமங்கலம் பகுதியில் சாலையோர ,ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூர்த்தி , 40வயது மதிக்கத்தக்க நபரை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள்,மாவட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் நல குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு லால்குடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

2

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் தீரன்நகர் வேலா கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சமூக ஆர்வலர்கள் பாலு,மணிகண்டன், ஆண்டனி, திலக்பிரபு ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.