திருச்சி என்ஐடியின் 2020ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர்விருதுகள் மற்றும் இளைய சாதனையாளர்கள் விருதுகள் அறிவிப்பு

என்.ஐ.டி.திருச்சிராப்பள்ளி இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி தாமஸ் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் விருது(DAA) மற்றும் இளம் சாதனையாளர் விருது (YAA) கடந்த 7ம் தேதி அன்று நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான 16 வது பட்டமளிப்பு விழாவில் அறிவித்தார்.

குறிப்பிடப்பட்ட பிரிவுகளின் கீழ் பின்வரும் முன்னாள் மாணவர்களுக்கு DAA விருது 2020 வழங்கப்பட்டது:

1.கல்வி / ஆராய்ச்சி / புதுமையாக்கம்/ கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள்

டாக்டர்.சத்திய கீர்த்தி செல்வராஜ், முதன்மை பணியாளர் விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு(AI), குழு, லிங்க்டின் நிறுவனம்,சன்னிவேல், கலிபோர்னியா. அமெரிக்கா (1980 பி.டெக். இயந்திரப் பொறியியல்); டாக்டர் என்.அனந்தராமன், என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் (எச்.ஏ.ஜி) (1977பி.டெக். வேதிப் பொறியியல் & 1985 பி.எச்.டி வேதிப் பொறியியல்); பேராசிரியர் சேது விஜயகுமார்,இணை இயக்குநர், செயற்கை நுண்ணறிவு(AI) திட்டம், ஆலன் டூரிங் நிறுவனம் லண்டன், யுகே (1992 பி. இ கணினிப் பொறியியல்); வி.சீனிவாசன், தலைமை கட்டுப்பாட்டாளர் / டி. இயக்குநர், சிறந்த விஞ்ஞானி – விக்ரம் சரபாய் விண்வெளி மையம், இஸ்ரோ, திருவனந்தபுரம், கேரளா (1974. பி.டெக் வேதிப் பொறியியல்)
2.கார்ப்பரேட் / தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்கள்:
டாக்டர்.அனந்தசேதுராமன், பொது மேலாளர் – அப்ளைடு மெட்டீரியல்ஸ் இன்க்., சி.ஏ, அமெரிக்கா (1982 பி.டெக் உலோகவியல்); கதிரேசன் அண்ணாமலை, மூத்த சந்தைப்படுத்தல் இயக்குநர், பெரிகாம் / டையோட்ஸ் இன்க்., சி.ஏ.,அமெரிக்கா (1976 பி. டெக் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) ராஜேஷ் கோபிநாதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், மும்பை (1994 பி. டெக் மின் மற்றும் மின்னணுப் பொறியியல்)

3.தொழில் முனைவோர் முயற்சியில் சிறந்து விளங்குபவர்கள்:
சப்னா பெஹர், கூட்டாளர் மற்றும் நிறுவன இயக்குநர் – இக்காரஸ்னோவா பிரைவேட் லிமிடெட் & இக்காரஸ் வடிவமைப்பு பிரைவேட் லிமிடெட், பெங்களூர் (1990 பி.டெக். மின் மற்றும் மின்னணுப் பொறியியல் )

4..சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்கள்:
ராஜேந்திர கே ஆர்யல், இயக்குநர் – உணவு மற்றும் வேளாண்மை ஐக்கிய நாடுகளின் அமைப்பு (FAO), ஆப்கானிஸ்தான் (1991பி.டெக் குடிசார் பொறியியல்) சிவசங்கர் ஜெயகோபால், நிறுவனர் தலைவர் -வின்வினயா அறக்கட்டளை, பெங்களூர்(1991 பி.டெக் கணினிப் பொறியியல்) YAA விருது கல்வி / ஆராய்ச்சி / புதுமையாக்கம் / கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள்:டாக்டர் கௌதம் ராம் சந்திர மௌலி,உதவி பேராசிரியர், டியு டெல்ஃப்ட், நெதர்லாந்து(2011 பி.டெக் மின் மற்றும் மின்னணுப் பொறியியல்). இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி தாமஸ் மற்றும் டீன் (ஐடி & ஆர்) அலுவலகத்துடன் விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் வெவ்வேறு களங்களில் தொழில் / கல்வி / சமூகத்தை வளப்படுத்துவதற்கு அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

முந்தைய ஆண்டுகள் போலவே, DAA-YAA விண்ணப்பங்களுக்கான அழைப்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வழிகளில் அழைக்கப்பட்டது. கல்வி / ஆராய்ச்சி / புதுமையாக்கம்/ கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள்,கார்ப்பரேட் / தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்கள்,தொழில் முனைவோர் முயற்சியில் சிறந்து விளங்குபவர்கள்,பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்கள் விளையாட்டு மற்றும் ஊடகவியல் போன்றவை உட்பட 5 பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டன.இணையம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது இதுவே முதல் முறையாகும். மொத்தம் 23 DAA விண்ணப்பங்களும் 3 YAA விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இயக்குநர், டீன் (ஐடி & ஏஆர்), அசோசியேட் டீன் (முன்னாள் மாணவர்கள் உறவுகள்) மற்றும் தொழில், கல்வி, மூத்த நிறுவன வல்லுநர்கள் முந்தைய DAA விருது பெற்றவர் உள்ளிட்ட சிறப்புக் குழுவால் அவை திரையிடப்பட்டு மற்றும் ஆராயப்பட்டது.பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் மாணவர்களின் மகத்தான பங்களிப்புகளை கவனமாக கருத்தில் கொண்டு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு இக்குழு 11 முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை தங்களது மகத்தான பங்களிப்புகளுக்கு வழங்கியது.
