திருச்சியில் போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா

திருச்சியில் போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா
திருச்சியில் போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா வெடிகளைக் குறைப்போம் பசுமையை வளர்ப்போம்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பூவாளூர் மாதானம் ஏரிக்கரையில் 240 போத்துகள் நடவு செய்யப்பட்டது.

லால்குடி கோட்டாட்சியர் திரு .வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார்.
மாரல் பவுண்டேசன் தண்ணீர் அமைப்பு, இயற்கை விழுதுகள் ஜெனித் அறக்கட்டளை ஆல்ஃபா அறக்கட்டளை, ஆகியோர் இணைந்து ஆலம், இச்சி, உதியம், வாதமடக்கி போத்துகள் ஏரிக்கரையில் நடவு செய்யப்பட்டது.

வெடிகளைக் குறைப்போம் பசுமையை வளர்ப்போம் என்ற நோக்கில் பசுமை தீபாவளி போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாரல் விவேகானந்தன், தண்ணீர் அமைப்பின் சார்பில் பேரா.கி.சதீஷ்குமார் , ஷியாம், ராஜமாணிக்கம், திவாகர், வின்சென்ட், முனியன், சிவா ,மணி, உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
