உலகம் மனிதனுக்கு மட்டுமல்ல பல்லுயிர்களுக்கும் தான்

0
Business trichy

உலகம் மனிதனுக்கு மட்டுமல்ல பல்லுயிர்களுக்கும் தான்

தீபாவளி திருநாளில் அதீத ஒலி சப்தத்தினால் மிரண்டு ஓடி ஒளிந்ததெருவோர நாய்களுக்கு உணவளித்த சமூக ஆர்வலர்

Rashinee album

தீப ஒளி திருநாளில் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாய், மத்தாப்புகளும், பட்டாசுகளும் வெடித்தோம்.ஆனால் நாய் , பூனை , ஆடு,மாடு போன்ற நம்முடனே வசிக்கும் விலங்கினங்கள் தீப ஒளி திருநாளை பய உணர்ச்சியோடு கடக்கின்றது .காரணம் அதீத ஒலி , வெடிப்பினால் வரும் புகை , அதிர்வுகளின் தாக்கம் விலங்குகளை பாதிக்கிறது.

Image

பட்டாசு வெடிப்பால் வேதிப்பொருள் சார்ந்த குப்பைகள் உருவாகிறது. அந்த குப்பைகளில் உணவை தேடும் விலங்கினங்கள் பாதிப்புக் குள்ளாகின்றன.வீதியெங்கும் வெடி சத்தம் , புகை மூட்டம் , திடிர் வெளிச்சம், அதிர்வு போன்றவை பிற உயிரினங்களை மிரள செய்து சிதறி ஓடவைத்து ,பயத்தையும், மனகுழப்பத்தையும் ஏற்படுத்துவதை திருவிழா காலங்களில் வெடி வெடிக்கும் பொழுது நேரடியாக பார்க்க முடிகிறது உணரமுடிகிறது. அதீத சத்தத்தினால் மிரண்டு, பயந்து பட்டாசு சத்தத்திற்கு அஞ்சி தன் வாழ்விடங்களை விட்டு ஓடி ஒளிந்து கொண்டது.

இதனால் விலங்கு மற்றும் பறவை ஆர்வலர்கள் அதிக வெடிசத்தத்தை தரும் பட்டாசுகளை தவிர்த்து மிரண்டு ஓடி உணவு உண்ணாமல் உள்ள தெருவோர நாய்களுக்கு திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உணவு அளித்தார்

Ukr

Leave A Reply

Your email address will not be published.