எண்ணெய்க் குளியல்

0

எண்ணெய்க் குளியல்

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வாத, பித்த, கபத் தோஷங்கள் உடலில் சம அளவில் வைப்பதற்கு உதவுகிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை உத்தம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்பட வழிவகுக்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

‌சந்தா 1

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்தவோட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராக்குகிறது.

இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

“நாள் இரண்டு,

வாரம் இரண்டு,

மாதம் இரண்டு,

வருடம் இரண்டு”

சந்தா 2

என்பது சித்தர்கள் வாக்கு.

நாள் இரண்டு மலம் கழித்தல்;

வாரம் இரண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்தல்;

மாதம் இரண்டு – உடலுறவு கொள்ளல்;

வருடம் இரண்டு பேதி மருந்து அருந்துதலை வலியுறுத்தியுள்ளனர்.

எண்ணெய் குளியலில், உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நன்கு பரவலாக நல்ல எண்ணெயை தேய்த்து இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் நன்கு தேய்த்தால், உள்ளுறுப்புகளால் வெப்பத்தைச் சரிவரப் பராமரிக்கப்படும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர்ச்சியால் சளி பிடித்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும், முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்மையான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

எண்ணெய் குளியலால் முடி உதிர்தல் குறையும், பார்வை பலப்படும், இளமைக் கூடும், ஆயுட்காலத்தைக் கூட்டும், தோலைப் பளபளப்புடன் வைத்திருக்க உதவும், உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும்,உள்ளுறுப்புகள் தங்களுடைய செயல்களைச் சிறப்பாகச் செய்யும், மனம் அமைதியையும்,

உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பற்றாலுடனும் வைத்திருக்கும், மூட்டுக்கு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தைக் குறைக்கும்,

உடலுக்கு ஆதாரமான, உடல் இயக்கத்துக்கு அடிப்படையான மூன்று தோஷங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலையில் வைக்க உதவுகிறது என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

Leave A Reply

Your email address will not be published.