என்று தணியுமிந்தத் தீநுண்மித் துயரம் கவிதை நூல் வெளியீடு

0
1

என்று தணியுமிந்தத் தீநுண்மித் துயரம் கவிதை நூல் வெளியீடு

என்று தணியுமிந்தத் தீநுண்மித் துயரம் கவிதை நூல் வெளியீடு திருச்சியில் நடைபெற்றது. நந்தவனம் சந்திரசேகரன் பன்னாட்டு கவிஞர்களின் தீநுண்மித் துயரம் தலைப்பில் 99 கவிதைகளை தொகுத்து நூலாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

தீநுண்மி பெருந்தொற்று காலமாக உள்ளதால் அயல்நாட்டு கவிஞர்களுக்கு அஞ்சல் மூலமும் உள்ளூர் பிரமுகர்களுக்கு நேரடியாகவும் வழங்கி வருகின்றார் என்று தணியுமிந்தத் தீநுண்மித் துயரம் கவிதை நூல் குறித்து தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் கூறுகையில், இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு துயரத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

2

துயரத்தைக் காலம் கடத்தி விட்டாலும், அதன் வடுக்கள் என்றுமே மாறாது. துயரத்தின் வலிகளைக் கவிதைகளாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல கவிஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கவிதைகளை நூலாக வெளியிட்டுள்ளோம். வரலாற்றில் இந்நூல் மைல்கல்லாக இருக்குமென கூறினார். திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் கவிஞருமான விஜயகுமார் என்ற வெற்றிச்செல்வன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமாரிடம் கவிதை நூல்களை வழங்கி வெளியிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.