திருச்சியில் கேளரா லாட்டரி விற்ற நபர்கள் கைது : போலீசார் அதிரடி:

0

திருச்சியில் கேளரா லாட்டரி விற்ற நபர்கள் கைது : போலீசார் அதிரடி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, எல்எஃப்., ரோடு பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா திருட்டு லாட்டரிகளைச் சிலர் விற்பதாக திருச்சி மாவட்ட தனிப்படை எஸ்ஐ., நாகராஜன் தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

சந்தா 2

‌சந்தா 1

இதில் திருவெள்ளறையில் திருட்டு லாட்டரிகளை விற்ற மண்ணச்சநல்லூர் தாலுகா தெற்கு சாலைப்பட்டி மணிமாறனின் மகன் சங்கர் (24) , மண்ணச்சநல்லூரில் லாட்டரிகளை விற்ற மண்ணச்சநல்லூர் புதுத்தெரு சென்னியப்பனின் மகன் திருஞானசம்பந்தம் (50) , இதேபோல், எல்எஃப் ரோட்டில் லாட்டரி விற்ற மண்ணச்சநல்லூர் தாலுகா செங்கிப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பெருமாளின் மகன் நடராஜ் (48) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்து மண்ணச்சநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ. 12 ஆயிரத்து 175 ரூபாயையும், 2 ஆண்ட்ராய்டு மற்றும் ஒரு பட்டன் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.