திருச்சி மைனர் காதலன் போக்சோவில் கைது

0
Business trichy

திருச்சி மைனர் காதலன் போக்சோவில் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் இவருடைய மகன் யுவராஜ் (19/2020) இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமி ஒருவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதன் மூலம் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார் இதன் மூலம் அவருடைய பெற்றோர் சமீபத்தில் சிறுமி திடீரென வயிற்று வலி என்று கூறியதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவர மருத்துவமனையின் மூலம் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை நேற்று 9/11/2020 கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்நபரை கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

web designer

இந்த வழக்கில் சிறுமியும் சம்பந்தப்பட்ட நபரும் இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது இருப்பினும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாத நிலையிலும் சம்மந்தப்பட்ட நபருக்கு 21 வயது பூர்த்தி அடையாத நிலையிலும் திருமண வயதை இருவருக்கும் இல்லை என்ற காரணத்தினால் பெற்றோர்களால் இவர்களுக்கு திருமணம் செய்யாமலும் இது மறைக்கப்பட்ட விஷயமாக இருந்துவிட கூடுமென்று எண்ணி உள்ளனர். ஆனால் மருத்துவமனையின் துரித நடவடிக்கையால் காவல்துறையின் நடவடிக்கையாலும் சம்பந்தப்பட்ட நபர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loan point

-ஜித்தன்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.