பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

0
Full Page

திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் .சு.சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “திருச்சி, மாவட்டத்தில், நடப்பு 2020-&21-ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது .

அதன்படி , எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் -11, பிர்கா அளவில் மக்காச்சோளம் 11 மற்றும் பருத்தி- மிமி பயிர்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

Half page

இத்திட்டத்தில் இணைய , முன்மொழி படிவம் , விண்ணப்ப படிவம் , பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல் , வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களை அணுகலாம்.

இத்திட்டத்தில், பருத்தி ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,435 செலுத்த வேண்டும் . பருத்தி காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும் . நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.511.50ம், மக்காச் சோளம் ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.360ம் நவம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு , அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்

.
கடந்த 2019&-20-ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் நெல், மக்காச் சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ.22 கோடி வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் நடப்பு ஆண்டில் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.