விரைந்து வரும் ரீஃபண்ட்..!

0

கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மத்திய அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதோடு, வரி செலுத்தியவர்களுக்கு திரும்பி தரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.

சந்தா 2

அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரையில் மொத்தம் 39.49 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.29 லட்சம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 37.55 லட்சம் பேருக்கு ரூ.34,820 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

‌சந்தா 1

அதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.93 லட்சம் பேருக்கு ரூ.94,370 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.