அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்…!

0
1

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகத் கூறியுள்ளது. அக்டோபர் மாதம் என்பது காரிப் பயிர்களுக்கான அறுவடைக் காலமும், பண்டிகை காலமும் ஆகும்.

2

இருந்தபோதிலும் வேலைவாய்ப்புகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அக்டோபர் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40.66 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. ஊரடங்கு காலத்திற்கு முன்பு தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 42 சதவீதத்துக்குக் குறையாமலேயே இருந்தது. ஆனால், அக்டோபர் மாதத்தில் 40 சதவீதத்துக்கு வந்துவிட்டது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் இது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.