எஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..?

0

வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை கணக்கில் வைக்காவிட்டால் அபராதத் தொகை என இருக்கும் காசையும் சுரண்டி எடுத்து விடுவார்கள். தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம தொகை மட்டுமே வங்கிகளுக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க ஒரு வழி உள்ளது. அது தான் ஙிஷிஙிஞி என்ற வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த கணக்கை திறந்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்.

food

மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்.. ஒன் கண்டிஷன்..! இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.