திருச்சியில் சரக காவல்துறையினர் நள்ளிரவில் நடத்திய திடீர் வாகன சோதனை:

திருச்சியில் சரக காவல்துறையினர் நள்ளிரவில் நடத்திய திடீர் வாகன சோதனை:
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில்இன்று 08 /11 /2020 அதிகாலை 12.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்டம் நெ-1 டோல்கேட் பகுதியில் அதிரடியாக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண் காவல் ஆய்வாளர்கள் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிவேகமாக ஓட்டி வந்த வாகனங்கள் என 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வாறு அதிரடியாக இரவு நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பெண் காவல் ஆய்வாளர்கள் சாலையில் இறங்கி வாகன சோதனை செய்தது, அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் சரவெடியை போன்ற தொடர் நடவடிக்கைகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்…
