அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு:

0

பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகையில், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், முதியோர் இல்லங்கள், எரிவாயு குடோன், பட்டாசு கடைகள் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமான பருத்தி ஆடைகள், பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும். பெரியோர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்.

தீபாவளியை பாதுகாப்போடு கொண்டாடுங்கள். பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள்.

மரங்கள், காடுகள் நிறைந்த பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. வெடிபொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது சைலன்ஸரில் படாதவாறு எடுத்துச் செல்ல வேண்டும். மத்தாப்பு, தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டிற்குள் வைத்துக்கொளுத்தக்கூடாது. எதிர்பாராத விதமாக தீப்பற்றினால் கீழே படுத்து உருள வேண்டும். மேலும் வெடிபொருள் விதி 2008 எண் 70ன் படி ஒவ்வொரு பட்டாசுகளை ஏற்றிச்செல்லும் சுமை ஊர்திகளில் 2 கிலோ அளவுள்ள தீயணைப்பு கருவிகள் வைத்திருக்கவேண்டும்.

பட்டாசு ஏற்றிச் செல்லும் சுமை ஊர்தி ஓட்டுனர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கூடியவராகவும், பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும், தீயணைப்பு கருவிகள் எளிதில் பயன்படுத்தும் அளவில் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். தாழ்ந்து செல்லக்கூடிய மின் வயர்களால் பெரும்பாலும் பட்டாசு ஏற்றிச்செல்லும் வாகனம் தீப்பற்றி வருகிறது .எனவே குறிப்பிட்ட உயரத்திற்கு விதிகளுக்குட்பட்டு பட்டாசுகளை அடுக்கி வைக்கவேண்டும்.

அதிக சுமைகளை ஏற்றக் கூடாது. பட்டாசு ஏற்றி செல்லும் வாகனத்தில் வெடிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனத்தை சுட்டிக்காட்டும் படியாக சிகப்பு கொடிகளை முன்புறம் கட்டி தெரியப்படுத்த வேண்டும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் பட்டாசு புகை உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும், நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பசுமை பட்டாசுகளை வைத்து வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றி கொண்டால் உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீ விபத்தின் போது மாவட்ட தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அவசரகால உதவி எண் 101 தொடர்பு கொள்ள வேண்டும் என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.