சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்:

0
1

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்:

திருச்சி கலெக்டர் க.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் 30ம்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது வரும் நவம்பர் 30ம்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2

மேலும் 2020-21ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு தற்போது முந்தைய வகுப்பில் மதிப்பெண் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என அரசு அறிவித்துள்ளது.  இந்த கல்வி உதவித்தொகையை பெற பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.