ஊழியர்களுக்கு 2021 ஜூலை வரை கொரோனா கால சலுகை..!

0

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்குப் பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனம் தனது ஊழியர்களை வருகிற ஜனவரி 2021 வரை வீட்டிலிருந்தே பணி புரியலாம் என அறிவித்திருந்தது. இப்போது அதை 2021 ஜூலை வரை நீட்டித்துள்ளது.

இதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை வரையிலும், கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தை நீட்டித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான கால வரையறையை நீட்டித்துள்ளது. ட்விட்டர் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் வீட்டிலிருந்து பணிபுரியும் காலத்தை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.