காதியில் ‘பட்டு’ செருப்பு..!

0
1

பட்டு, பருத்தி மற்றும் கம்பளி போன்ற காதி துணியை கொண்டு காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையமானது உயர்தர காதி காலணி களை தயாரித்துள்ளது. கையால் நெசவு செய்யப்பட்ட மென்மையான காதி துணியால் தயாரிக்கப்பட்ட இந்த காலணிகளை காதி விற்பனை நிலையங்களில் மட்டுமின்றி http://www.khadiindia.gov.in./என்ற இணையதளம் மூலமும் நீங்கள் வாங்கலாம்.

காதி துணியிலான காலணிகள் போன்ற பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் நிர்ணயித்துள்ள ரூ.5,000 கோடி வர்த்தக இலக்கினை அடையலாம்” என்கிறார் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளமான நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த காலணிகளை தயாரித்துள்ளதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தை வெகுவாக பாராட்டினார். இத்தகைய பொருட்களின் மூலம் சர்வதேச சந்தையை பிடிக்கலாம் என்று அவர் கூறினார்.

அத்துடன் ‘தீபாவளி வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்ட இரட்டை அடுக்கு முகக்கவசங்கள் தூய மஸ்லின் துணியில் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாரம்பர்ய காதி கலைஞர்களால் உயர் தரமான கைத்தறியால் உருவான அதி நவீன பருத்தி துணியால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத காலகட்டத்துக்குள் நாடு முழுவதும் இது போன்ற 18 லட்சம் முக க்கவசங்களை காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையம் விற்பனை செய்துள்ளது. மஸ்லின் முகக்கவசங்கள் தலா ஒவ்வொன்றும் ரூ.75 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.