நகைக் கடைக்கே சேதாரம் காட்டிய விளம்பர ஏஜென்ஸி..!

0

வர்த்தக சந்தையில் புதிதாக ஒரு பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அந்த பொருள் குறித்த அரிதலையும், புரிதலையும் பொது மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேள்விக்கு பதில் தருபவர்கள் விளம்பர ஏஜென்ஸிகள்.

தமிழகத்தில் தமிழ் நாளிதழ்கள், ஆங்கில நாளிதழ்கள், எஃப்.எம். ரேடியோ, சாலையோர விளம்பரம்(ஹோர்டிங்ஸ்) மற்றும் தொலைகாட்சி ஆகியவையே மக்களை சென்றடையும் முக்கிய விளம்பர ஊடகமாக கருதப்படுகிறது. இதையடுத்து உள்ளுர் தொலை காட்சிகள், நாளிதழ்களில் வைக்கப்பட்டு விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், ஆட்டோ விளம்பரம், பேருந்து பின்புற விளம்பரம், மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்படும் விளம்ப ரபலகைகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வைக்கப்படும் டி.வி.க்களில் ஒளிபரப் பாகும் விளம்பரங்கள் உள்ளிட்டவை அடுத்தகட்ட விளம்பர வாய்ப்பாக கருதப்படுகிறது.

ஒரு வர்த்தக நிறுவனம் எந்தெந்த நாளிதழ்கள், ரேடியோ, சாலையோர விளம்பரம் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்கள் மக்களை அதிகளவு சென்றடையும் என்ற புள்ளிவிபரங்களுடன், தயாரிப்பு கட்டணம், விளம்பர கட்டணம் உள்ளிட்ட விபரங்களை விளம்பர ஏஜென்ஸிகள் கையில் வைத்திருக்கும்.

பொதுவாக விளம்பர ஏஜென்ஸிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒரு கட்டணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் பொருட்களின் நன்மை, தீமைகளை கருத்தில் கொள்ளாமல் வர்த்தகர்களின் தேவையை உணர்ந்து மக்களிடம் உண்மை, பொய்களை கலந்து விளம்பரம் செய்கின்றன.

ஆனால் இப்போது விளம்பர ஏஜென்ஸிகளோ மக்களைவிட வர்த்தகர்களையே பெருமளவு ஏமாற்றி வருகின்றன.
சமீபத்தில் திருச்சியில் திறக்கப்பட்ட ஒரு நகை கடையானது தனது பொருளை சந்தைப்படுத்த ஒரு விளம்பர ஏஜென்ஸியை நாடியுள்ளன. அவர்களோ பல வகையான விளம்பர வாய்ப்புகளை நகைக்கடை உரிமை யாளரிடம் கூறி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிபடி முழுமையாக விளம்பரங்கள் செய்யப்படவில்லை.

வாடிக்கையாளருக்கு எந்தெந்த நாளிதழிற்கு என்னென்ன விளம்பர கட்டணம் என்பதை கூட கண்ணில் காட்டவில்லை. நிறுவன விளம்பரத்தை அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரும் வகையில் விளம்பரங்களை நாளிதழிற்கு பிரித்து வழங்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் தங்களுக்கு லாபம் தரும் ஒரு சில பத்திரிக்கைகளுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்து தங்கள் பணியை முடித்துக் கொண்டது அந்த விளம்பர ஏஜென்ஸி.

விளம்பரங்கள் சம்பந்தபட்ட நாளிதழின் நேரடி பிரதிநிதிகள் மூலம் கொடுத்தால் மட்டுமே வர்த்தகர்களுக்கும் நாளிதழ் நிர்வாகத்திற்கும் இடையேயான உறவு நன்றாக இருக்கும். ஆனால் இப்படிப் பட்ட விளம்பர ஏஜென்சிகள் மூலம் நடை பெறும் வர்த்தகம் நிறுவனங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது.

பொதுவாக தங்க நகை விற்பனையில் ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் தடம் பதித்துள்ளனர். அவர்களின் கடையில் பொருள் வாங்குகிறார்களோ இல்லையோ அந்த கடையின் பெயரை பெருவாரியான மக்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். காரணம் விளம்பரம். இதனடிப்படையில் தான் தங்கம், வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்களின் பெயர் விளம்பரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த விளம்பர ஏஜென்ஸியோ புதிதாக தொடங்கப்பட்ட அந்த நகைக்கடையின் பெயரைக் கூட பொது மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அப்படி ஒரு கடை இருப்பதே தெரியவில்லையென்றால் அவர்கள் விற்கும் பொருட்களின் தரம், டிசைன் மற்றும் சலுகைகள் எப்படி பொது மக்களை சென்று சேரும்.

இந்த வகையான விளம்பரங்கள் தான் பொது மக்களை சென்றடையும் எனக் கூறி ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை பெற்ற அந்த விளம்பர ஏஜென்ஸி தனது பொருளாதார இலக்கை எட்டிவிட்டது. ஆனால் நகைக்கடை உரிமையாளரோ புதிதாக கடை தொடங்கியவுடனேயே கண்ணுக்கு தெரிந்து ஒரு நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

ஏற்கனவே புதிய ஒரு ஹோட்டல் திறப்பிலும் இதே பாணியிலான வருமானத்தை திரட்டியுள்ளது அந்த விளம்பர ஏஜென்ஸி.

Leave A Reply

Your email address will not be published.