திருச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

0
Business trichy

திருச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. திருச்சி என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு, சின்னகடைவீதி ஆகிய பகுதிகளில் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தில் செயின் பறிப்பு, வழிப்பறி போன்றவற்றை தடுக்கும் விதமாக காவல் உதவி மையம், கண்காணிப்பு கோபுரத்தின் செயல்பாடுகளை  நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார். பின் நீருபர்களிடம் கூறியதாவது:

Rashinee album

திருச்சி பெரியகடை வீதி, சின்னகடை வீதி, சிங்காரத்தோப்பு ஆகிய பகுதிகளில் 8 கண்காணிப்பு கோபுரங்களும், 127 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  குற்றச்சம்வங்களை தடுக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் அமர்ந்தப்பட்டுள்ளன.  முக்ககவசம் இல்லாமல் வருவபர்களுக்கு  அபராதம் விதிக்கப்படும் . மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக  தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றார் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் லோகநாதன்.

Image

இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம், குற்றம் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.