பெண் குழந்தைகள் பாலின விகிதம் அதிகரிப்பு மருத்துவர்களுக்கு கலெக்டர் பாராட்டு :

0
1

பெண் குழந்தைகள் பாலின விகிதம் அதிகரிப்பு மருத்துவர்களுக்கு கலெக்டர் பாராட்டு :

“பெண் குழந்தைகளை பாதுகாப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”  திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது : இத்திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பாலின தேர்வு அடிப்படையில் கருவிலுள்ள பெண் குழந்தைகளை அழிப்பதை தடுக்க வேண்டும்.

2
4

பாலின விகிதத்தை சரி செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு முதல் கருகலைப்பிற்கான விவரங்கள் சுகாதார நிலையங்கள் வாரியாக சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிக அளவில் கருக்கலைப்பு செய்த இரண்டு தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாலின தேர்வு அடிப்படையில் கருவில் உள்ள பெண் குழந்தைகளை அழிக்க வரும் பெண்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். பெண் குழந்தைகளின் வாழ்விற்கு உதவும் சட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார் .

பின்னர், பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்துள்ளதை பாராட்டி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.