கல்லறை திருநாளில் திருச்சி R.C.M.C கல்லறை திறக்கபடவில்லை; மக்கள் அதிருப்தி:

கல்லறை திருநாளில் திருச்சி R.C.M.C கல்லறை திறக்கபடவில்லை; மக்கள் அதிருப்தி:
திருச்சியில் கல்லறை திருநாள் – ஆர் சி கல்லறை தோட்டங்களில் அனுமதியில்லாததால் பொதுமக்கள் அதிருப்தி – வெளியூரிலிருந்த வந்தவர்கள் ஏமாற்றம் – போலீசாருடன் வாக்குவாதம்
வடரும் தோறும் நவம்பர் 2ம்தேதி இறந்தவர்களை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிராத்தனை செய்யும் நாளை கல்லறை திருநாளாக கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவு, பழங்கள் படையலிட்டு, கல்லறையில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுப்பட்டால் குடும்பத்தில் நன்மை ஏற்படும் என்பது அவர்களது மத நம்பிக்கை.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் முதலில் அனைத்து ஆலயங்களிலும் கல்லறைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் திருச்சி மறை மாவட்ட ஆயர் பொறுப்பு தேவதாஸ் அம்புரோஸ் வழக்கமாக கல்லறை திருநாள் கொண்டாடப்படும் என கூறியிருந்தார்.
திருச்சியில் பூந்தோட்டம், கண்டோன்மெண்ட் ஆங்கிலோ இந்தியன், உறையூர் கல் நாயக்கன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில் இன்று வழக்கம்போல் கல்லறை திருநாள் நடைபெற்று வருகிறது. இதே போல் குட்ஷெட் ரோட்டில் R.C.M.C. கல்லறை மற்றும் உத்திரியமாதா கோவில் கல்லறை உள்ளது. இதில் உத்திரியமாதா கோவில் கல்லறையில் பொதுமக்கள் வழக்கம் போல் முன்னோர்களுக்கு படையல்யிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்தனையில் ஈடுப்பட்டனர்.
ஆனால் அருகில் இருந்த R.C.M.C கல்லறை தோட்டத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாறாக கல்லறை வாசலில் நேற்றும், இன்று 2ம் தேதியும் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இல்லை என அங்கு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனை அறியாமல் உள்ளுர் மற்றும் சென்னை, தஞ்சை உள்ளிட்ட வெளியூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கல்லறைக்கு வந்தனர். பூட்டியுள்ளதை கண்டு கல்லறை கமிட்டி நிர்வாகியிடம் வெளியூரில் இருந்த வருவதாகவும், மேலும் இந்த நாள் மிகவும் முக்கியம் வாய்ந்த நாள் என கேட்டுள்ளனர். அவர்கள் சரியானபடி பதில் தெரிவிக்காததால் கல்லறை வாசலில் வாங்கி வந்த மாலை, மெழுகுவர்த்தி வைத்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சலசல ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்த பாலக்கரை காவல் நிலைய காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்,
இதில் காவலர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடைமே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கல்லறையின் வாசலில் பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
பேட்டி :
1). அம்மு – சென்னை,
