திருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:

0
Business trichy

திருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:

web designer

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பன். இவரது 12 வயது மகன் கிருஷ்ணனை கடந்த 28/10/2020 மாலை  மர்ம கும்பல் காரில் கடத்தியது. அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மூலம்  சிறுவன் கடத்தப்பட்ட காரை  போலீசார் நெருங்கினர். போலீசார் பின்தொடர்வதை  அறிந்த  கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் திருச்சி, ராமலிங்க நகர் விஸ்தரிப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் காரை  நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். பின்பு காரில் இருந்த சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுப்பட்ட மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை, சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறுவனை கடத்திய ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மாணிக்க பாண்டியன், சரவணன், செல்வகுமார், சதீஷ், பிரகாஷ்  ஆகியவரை  நேற்று போலீசார் கைது செய்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.