ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி:

0

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி:

சந்தா 2

திருச்சி கலெக்டர் க.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 3 மாதம் முதல் 6 மாதம் வரை கட்டணம் இல்லாமல்  இலவசமாக அளிக்கப்படுகிறது.  திருச்சியில் 7 பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இப்பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து படிகள் மற்றும் இதர படிகள் மற்றும் பயிற்சியின் முடிவில் உரிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.  லால்குடி, தொட்டியம்,  மணப்பாறை, கொணலை, திருவெள்ளரை,  துறையூர், பகுதிகளில் உள்ள அறக்கட்டளை மூலமாக வன்பொருள் பொறியாளர் பயிற்சி, தையல் இயந்திரம் ஆபரேட்டர் பயிற்சி, டிடிபி, ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு விரும்பும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.  பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும்.  மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 0431-2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.