ஜீ-கார்னரில் காய்கறி மார்க்கெட்டை தொடர அனுமதி:

0

ஜீ-கார்னரில் காய்கறி மார்க்கெட்டை தொடர அனுமதி:

சந்தா 2

திருச்சி காந்தி மார்க்கெட்  கரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தற்காலிகமாக பொன்மலை ஜீ கார்னர் பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதில் காந்தி மார்க்கெட் திறப்பிற்கு நீதிபதிகள் அனுமதி மறுத்தனர் மற்றும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் நடைபெறும் காய்கறி கடைகளை இந்த மாத இறுதிக்குள் காலி செய்து தரும் படி மாவட்ட நிர்வாகத்திற்கு ரெயில்வே சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ரெயில்வே அதிகாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் காந்தி மார்க்கெட் வழக்கு முடிவுக்கு வரும் வரை ஜீ-கார்னர் பகுதியில் மார்க்கெட்டை நடத்திக் கொள்ள இரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.  விரைவில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.