காந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு:

காந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு:

திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. தற்காலிக காய்கறி கடைகள் ஜீ கார்னர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், புதியாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்ககோரியும், திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையில் இருப்பதால் காந்தி மார்க்கெட்டை திறக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் காந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த தடையை நீக்க கோரி வியாபாரிகள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் கள்ளிக்குடி மார்க்கெட் சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி அரசு தரப்பினருக்கு உத்தரவிட்டனர். பின்னர் காந்தி மார்க்கெட் திறக்க விதித்த தடையை நீக்க மறுத்தனர். இவ்வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
