திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

0

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் 27/10/2020 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில்மயக்க நிலையில் கிடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து சிகிச்சையில் இருந்தவர் 27/ 10/2020 அன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இவரது பெயர் மற்றும் முகவரி இவரை பற்றிய வேறு எந்தவிதமான தகவலும் தெரியவில்லை . இந்த நபர் முழுக்கை வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி இடுப்பில் பச்சை கலர் பெல்ட் அணிந்துள்ளார். வழுக்கைத் தலை நரைத்த முடி உள்ளது. அவரது நிறம் மாநிறம் உயரம் சுமார் 5 1/2 அடி இருக்கும்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் கண்டோன்மென்ட் காவல் நிலையம் திருச்சி.04312460692 ,9498159397 ,9498156856.

Leave A Reply

Your email address will not be published.