திருச்சியில் 4 நாட்களுக்கு காய்கறிகள் கடைகள் அடைப்பு:

0
full

திருச்சியில் 4 நாட்களுக்கு காய்கறிகள் கடைகள் அடைப்பு:

ukr

கொரோனா ஊரடங்கால் திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 27ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது ஜிகார்னர் பகுதியில்  காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.  காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூட வேண்டும் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்கவேண்டும் என திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் காந்தி மார்க்கெட் திறப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு  வரும் 28ம்தேதி விசாரணைக்கு வருகிறது.  இதுதொடர்பாக நேற்று ஜிகார்னர் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜீலு தலைமை வகித்தார்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கோவிந்தராஜீலு நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 28ம்தேதி மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளுக்கு சாதகமான சூழலை உண்மை நிலையை நீதிபதிகளிடம் தெரிவித்து  இடைக்கால தடையை நீக்கி மீண்டும் காந்தி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உணர்த்தும் வகையில் வரும் 25ந்தேதி முதல் 28ந்தேதி வரை திருச்சியில் எவ்வித காய்கறி மார்க்கெட்டும் இயங்காது என்றார்.  28ந்தேதி சாதகமான முடிவு ஏற்படவில்லை என்றால்  மறுநாள் தமிழக தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.