திருச்சி ஸ்ரீராம் நகரில் மாநகராட்சியின் அலட்சியம் :

0
full

திருச்சி ஸ்ரீராம் நகரில் மாநகராட்சியின் அலட்சியம் :

 

திருச்சி ,  பர்மா காலனி ஸ்ரீராம் நகரில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை  குழி தோண்டும் பணி நடைபெற்றது. சாலையில் நடுவே தோண்ட பட்ட இந்த குழிவை சரிவர மூடாமல் சென்றதால் இந்த பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு சகதியாகவும், பள்ளமாகவும் காணப்படுகிறது.

poster
ukr

இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு  தகவல் கொடுத்தும் மீண்டும் சரியான முறையில் குழியை மூடாமல் மேலாக மண்னை கொட்டி  செல்கிறார்கள். மீண்டும் நீர்கசிவு ஏற்படுகிறது.

இதனால் அந்த வழியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதாள சாக்கடை குழி தோண்டும் போது மணலை கடத்தி  விற்பனை செய்கிறார்கள் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.