திருச்சியில் அன்பை பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக விளங்கும் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்.!

0

திருச்சியில் 100 ஆண்டுக்கும் மேற்பட்டு இயங்கும் கடைகள் எது என யாரிடம் கேட்டாலும் முதலில் அவர்கள் சொல்வது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் தான்.! அனைத்து தரப்பு மக்களின் மனங்களிலும் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் பெயர் பதிந்து போனதற்கான காரணம் என்ன.?

112 ஆண்டுகளுக்கு முன்பு 1908ல் பி.கோவிந்தராஜூலு நாயுடு என்பவர் திருச்சி, பிரபாத் திரையரங்கம் (இப்போது திரையரங்கம் இல்லை) அருகில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் என்ற பெயரில் புதிய கடையை தொடங்குகிறார். ஆரம்பத்தில் இனிப்பு பலகாரத்தை மட்டுமே கொண்டு விற்பனை செய்து வந்தார். இனிப்பு பிரியர்கள் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் வழங்கும் பூந்தி, லட்டின் மீது அதிக ஈரப்பு கொண்டுள்ளனர். பூந்தி, லட்டு மட்டுமே வைத்து திருச்சி மக்களை ஈர்த்தவர், பின்னர் தான் கார வகைகளையும் விற்கத் தொடங்கினார்.

1908ல் ஒரே ஒரு கடையுடன் தொடங்கிய பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் கிளையை கோவிந்தராஜூலு நாயுடுவின் மகன் பக்தவச்சல நாயுடு 1998ம் ஆண்டு திருச்சி, பெரிய கடைவீதியில் தொடங்குகிறார். இன்று திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர். திண்டுக்கல். பட்டுக்கோட்டை, மதுரை என ஆறு மாவட்டங்களில் 29 கிளைகளுடன் செயல்படுகிறது. இந்த வளர்ச்சிக்கான காரணம் என்ன என கேட்டால் “உழைப்பு” என ஒற்றை வார்த்தையை பதிலாக தருகிறார் உரிமையாளர்களில் ஒருவரான விநோத்.

பி.கோவிந்தராஜூலு நாயுடு அவர்களால் 1908ல் தொடங்கப்பட்ட பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், அவரது மகன் பக்தவச்சலம் நாயுடு, அவருக்கு அடுத்து பாலாஜி ஆகியோரால் வளர்க்கப்பட்டு இன்று பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் ஆகிய மூவரின் பார்வையில் செயல்பட்டு வருகிறது. நான்காவது தலைமுறையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான விநோத் நம்மிடம் கூறுகையில்,

“எங்கள் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் உழைப்பு, மக்களை நேரடியாக அணுகும் முறை இவை தான் எங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.

மற்ற வியாபாரம் போல் அல்ல எங்களது விற்பனை. எங்கள் கடையில் இனிப்பு வாங்கி சாப்பிட்டுப் பார்த்த உடனே விடை கிடைத்துவிடுகிறது. வாடிக்கையாளர் அதை விரும்புகிறாரா.. இல்லையா.. இல்லையென்றால் என்ன காரணம் என்பதை நேரடியாக அறிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களிடம் நேரடி தொடர்பு வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.

ஆரம்பத்தில் என் கொள்ளு தாத்தா பூந்தி, லட்டு மட்டுமே கொண்டு கடையை தொடங்கினார். வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் ஒரு லட்டை கையில் கொடுத்து சாப்பிடச் செய்வார். அதன் சுவையே அவர்களை தொடர்ந்து எங்களிடம் இனிப்பு வாங்கச் செய்யும். இந்த அணுகுமுறையை தான் நாங்கள் 112 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.

இனிப்பின் மீது தமிழக மக்களுக்கென்று ஒர் ஈர்ப்பு உண்டு. அது போல் பிற மாநிலத்தவர்களும் இனிப்பு பலகாரத்தை விதவிதமாக தயாரித்து உண்பார்கள். வடமாநிலங்களுக்கு சென்றால் அங்குள்ள இனிப்பு மற்றும் கார வகைகளின் செய்முறைகளை அறிந்து அதையும் நாங்கள் தமிழ் மக்களுக்கு வழங்குகிறோம். இதனால் ஏராளமான சுவைகளில் விதவிதமான பலகாரங்களை எங்களால் வழங்க முடிகிறது.

எங்கள் கடையில் விற்கப்படும் மில்க் ஸ்வீட்ஸ் தயாரிப்பதற்கென்றே திருச்சி -கல்லணை சாலையில் கீழமுல்லைக்கொடியில் மாரம்மாள் என்ற பெயரில் பால் பண்ணை வைத்துள்ளோம். சொந்த பால் பண்ணையிலிருந்து பால் தருவிக்கப்பட்டு இனிப்புகளை தயாரிப்பதால் தரம் மாறாமல் சுவையாக எங்களால் தர முடிகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய வி.வி.ஐ.பிக்கள் பலரும் எங்களது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் தயாரிப்புகளை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள் தரமும், சுவையும் தான் முக்கிய காரணம். தலைமுறை தாண்டிய எங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் பலரும் தலைமுறையாக வாங்கி சாப்பிடுகிறவர்கள் தான்” என்றார் விநோத் பெருமிதத்துடன்.!

“பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், தரமான இனிப்பு பலகாரங்களை, சரியான விலையில் வழங்குவதை நாம் ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்தால் புரியும், பிற கடைகளில் ஏன் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று.?” என்கிறார் வாடிக்கையாளர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸ் பரத்வாஜ்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்றவர்களுக்கு பரிசாக தருவதற்கென்றே அழகிய பேக்கிங்கில் தென்இந்திய, வடஇந்திய, பெங்காளி இனிப்புகளை வழங்கி வருகிறார்கள். இனிப்பை பரிசாக வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக விளங்குகிறது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்.!

Leave A Reply

Your email address will not be published.