தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கான தீர்வு – தொடர் முயற்சியே..!

0
full

ஹென்றி ஃபோர்ட் அவர்களின் முதல் கண்டுபிடிப்பு, நான்கு சக்கர மிதிவண்டி. அது மற்றவர்கள் அறியாமலே அழிந்தது. 1900-களில் வாகனத்துறையில் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. அவரது முயற்சி தோல்வியுற்றதால் அவருக்கு முதலீட்டாளர்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும், ஹென்றி ஃபோர்ட் தனது கனவுகள் இந்த தடைகள் மூலம் முடங்கிப் போக அனுமதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து, 1908-ல் வாகனத்துறையை புரட்டி போட்ட மாடல் டீ வடிவமைத்தார். அது ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கும், ஹென்றி போர்டிற்கும் வாழ்வை மாற்றியமைத்தது. அவரது கனவு மெய்ப்பட சிறிது காலம் எடுத்தாலும், அது மெய்ப்படுவதை உறுதி செய்தார் ஹென்றி போர்ட்.!

“தோல்விகள் நாம் மீண்டும் புத்திசாலித்தனமாக யோசித்து துவங்க நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள்” – ஹென்டிரி ஃபோர்ட், ஃபோர்ட் மோட்டார் நிறுவனர்.

poster

அமெரிக்க தொழிலதிபர் மார்க் க்யூபன் ஒரு காலத்தில் தனது வீட்டின் மின்சாரக் கட்டணத்தை கூட கட்டும் அளவு கூட அவரிடம் பணம் இல்லை. மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டது போன்ற சோதனை காலங்கள் இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து, தன்னை விமர்சித்தவர்கள் வாயை அடைத்தார். தற்போது டல்லாஸ் மாவரிக்க என்ற என்.பி.ஏ. அணியிலும், அமேசான், நெட் ஃப்லிக்ஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்களிலும் தற்போது அவர் முதலீடு செய்துள்ளார்.

“நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், எத்தனை முறை தோற்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஒரு முறை நமது முயற்சி சரியானதாக இருந்தால் போதும். பல முறை மூடன் போல தவறான முடிவுகள் எடுத்துள்ளேன். ஆனால் அவற்றில் இருந்து கற்றுக் கொள்ளவும் நான் தவறவில்லை. தோல்விகளே தன்னை மீண்டும் முயற்சிக்க வைத்து வெற்றி பெற வைத்தது. –  மார்க் க்யூபன், அமெரிக்க தொழிலதிபர்.

half 2

தொழில்அதிபர் ரிச்சர்ட் ப்ரான்ஸன், அவர் தொடங்கிய விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் மிகப்பெரிய தடைகளை சந்தித்தது. சில பறவைகள் சோதனை ஓட்டத்தின் போது அவரது விமானத்தின் என்ஜினில் புகுந்ததால் அதிகமான சேதாரம் ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்வு அதன் பின் தேவையான அனுமதிகள் அவர் பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அடுத்தாக சேதாரங்களை சரி செய்ய அவரிடம் பணமும் இருக்கவில்லை. ஆனால் மீண்டும் அந்த விமானத்தை ஆகாயத்தில் பறக்க விடும் வரை அவர் ஓயவில்லை. தனது வாழ்விலும் தொழிலிலும், புதிய முயற்சிகளை எடுக்க அவருக்கு இருந்த துணிவு, அவரை போன்று வாழ்வில் இன்னல்களை சந்திக்கும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருந்துள்ளது.

“தோல்விகளை கண்டு மனம் கலங்காதீர்கள். அவற்றில் இருந்து கற்றுக் கொண்டு மீண்டும் முதலில் இருந்து துவங்குங்கள். விதிகளை பின்பற்றி நடக்க கற்றுக் கொள்ளவில்லை. கீழே விழுந்து எழுந்து, மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து கற்றுக் கொள்கின்றோம்“ –  தொழில்அதிபர் ரிச்சர்ட் ப்ரான்ஸன்

திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மெகா ஸ்டாராக ஆகும் முன்பு, அவருக்கும் அதிக சறுக்கல்கள் வாழ்வில் இருந்தன. 1960-களில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகும் கனவோடு அணுகிய போது, அப்போதிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ஆனால் அந்நிகழ்ச்சி அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. தனது கவனத்தை திரைபடங்கள் பக்கம் திருப்பி முயற்சிகளை துவக்கி இன்று தனது வானொலி கனவை விடவும் மிக அதிக உயரங்களை தொட்டுள்ளார்.

“நாளை எனக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என நம்புகின்றேன். எப்போதும் நான் செய்து முடிக்கவும், அறிந்து புரிந்து கொள்ளவும் அதிக விஷயங்கள் இருப்பதாகவும் கருதுகிறேன்” –  நடிகர் அமிதாப்பச்சன்,

திரைப்பட நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன், நடித்த “ராக்கி” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெரும் முன்பு, சில்வெஸ்டர் ஸ்டாலோனை எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ராக்கி திரைப்படம் உருவான கதையை திரைப்படமாக எடுத்தால் அதுவும் மாபெரும் வெற்றியடையும். அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்த கதை அது. ராக்கி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய போது, ஸ்டாலோன் அனைத்தையும் இழந்திருந்தார். தனது நாயை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்தார்.

“ஒவ்வொரு முறை நான் தோற்ற போதும், அத்தோடு முடிந்ததாக மக்கள் நினைத்தனர், ஆனால் எப்போதும் நான் மீண்டு வந்துள்ளேன். – நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்

half 1

Leave A Reply

Your email address will not be published.