பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு

0
full

பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்-எஸ்.பி.ஐ. இணையதளம் இடையேயான ஏ.பி.ஐ. ஒருங்கிணைப்பின் மூலம் தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் ஒப்புதல் அளிக்க முடியும்.

தொழில் முதலீட்டிற்கு கடன் கோரும் நடைபாதை வியாபாரிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் மற்ற வங்கிகளுடன் ஒருங்கி ணைப்பை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த ஜூன் 1ம்தேதி கொரோனா முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் தொடங்கப்பட்டது.

poster
ukr

நடைபாதை வியாபாரி, ரூ.10 ஆயிரம் தொழில் முதலீட்டு கடன் பெற்று, அதை மாத தவணையாக ஒராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7% வட்டி மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாத தவணையை டிஜிட்டல் மூலமாக செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.1,200 வரை பணம் திரும்ப கிடைக்கும்.

பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின்கீழ், கடந்த 6ம்தேதி வரை, 20.50 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2.40 லட்சம்கடன்கள்வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்காசங்கர்

half 1

Leave A Reply

Your email address will not be published.