குழந்தைக்கு பாலியல் வன்முறை மிரட்டல் நடவடிக்கை எடுக்க பெண் வழக்கறிஞர்கள் முதல்வருக்கு கோரிக்கை

குழந்தைக்கு பாலியல் வன்முறை மிரட்டல் நடவடிக்கை எடுக்க பெண் வழக்கறிஞர்கள் முதல்வருக்கு கோரிக்கை
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனிடையே விஜய் சேதுபதி மகளுக்கு ரித்திக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் பாலியல் ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற வகையிலும்,அச்சம் கொடுக்கும் விதத்திலும், ஆபாசமாகவும், காட்டு மிராண்டித்தனமாக கற்பழிப்பு மிரட்டல் பதிவிட்டுள்ள செய்தியினை அச்சு/காட்சி/சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வருத்தத்தையும், வேதனையையும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கத் திட்டமிட வேண்டும். குழந்தைகளுக்கு
துன்புறுத்தல்களும், வன்முறையும் சொல்லாலும், செயலாலும் நடைபெறா வண்ணம்
மனரீதியான, உடல்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என பேரன்ட்ஸ் அறக்கட்டளை வழக்கறிஞர்
ஜெயந்தி ராணி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா உள்ளிட்டோர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
