கொரோனா காலத்தில் தொழிற்சாலை உற்பத்தி சரிவு 25 சதவீதம்..!

0
Full Page

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் வரை தொழிற்சாலை உற்பத்தி பெருமளவு சரிவை சந்தித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தொழிற்சாலை உற்பத்தி 25% சரிவு கண்டுள்ளது. ஏப்ரலில் 57.3%, மே மாதத்தில் 33.4%. சரிவை பெற்றுள்ளது. ஜூலை மாதம் 10.8% சந்தித்த இந்த சரிவு ஆகஸ்டில் 8% குறைந்துள்ளது.

“நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் எதிர்பார்த்த 6.4% ஐவிடவும் அதிகரித்து 7.4% ஆக உள்ளது. அக்டோபரிலும் இது 6-7% ஆகவே இருக்கும். காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உணவு, மருந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் என்று அனைத்து உற்பத்தியும் சரிவு கண்டது, உலோக மூலப் பொருள், புகையிலை, போக்குவரத்து உபகரண உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளது” என்கிறார் கேர் ரேட்டிங்ஸின் தலைமை பொருளாதார நிபுணர் மதன்சப்நாவிஸ்.

Half page

உணவுப் பொருட்கள் விலையேற்றத்தினாலும் போக்குவரத்து செலவுகளினாலும் ஏற்பட்ட பணவீக்க விகித அதிகரிப்பினால் மத்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்பு கடினம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) முழு அமர்வு கூட்டம் மற்றும் நிதிக்குழு கூட்டத்தில், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கை களை மீட்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட நிதியுதவி திட்டங்கள் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உற்பத்தி துறையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொள்முதல் குறியீடுகள் மிக அதிக அளவை எட்டியுள்ளது. நுகர்வோர் செலவினத்தை அதிகரிப்பதற்காக, 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்க வும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் போராடி வருகிறது. இந்த மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட அனுமதிக்க கூடாது” என்றார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.